mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News

மெரினா மீண்டும் திறக்கப்படுவது எப்போது?

September 10, 2020 11:10 am

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரை, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மாதந்தோறும் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மாநகரில் கோயில்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுப் பேருந்து போக்குவரத்தும், மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரை, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மாதந்தோறும் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மாநகரில் கோயில்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுப் பேருந்து போக்குவரத்தும் மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது. இவ்வாறாக சென்னை மாநகரம் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில், சென்னைவாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரமாக திகழும் மெரினாவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறந்து விட அரசு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், மெரினா கடற்கரையின் சிறப்பு, மெரினாவில் அமைந்துள்ள தலைவர்களின் சமாதி, இங்கு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவை குறித்து இங்கு காண்போம்.

சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் மெரினா கடற்கரை இந்திய மாநகரங்களில் அமைந்துள்ள கடற்கரைகளில் மிக நீளமானது மற்றும் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ளது. வங்காள விரிகுடா கடல் எல்லையில் அமைந்துள்ள இந்த கடற்கரையின் மொத்த நீளம் 13 கி. மீ.. உலாவும் சாலை நீளம் 6 கி.மீ. ஆகும். மும்பை மாநகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.

மெரினா கடற்கரையையொட்டி காந்தியடிகள், வ.உ.சி, திருவள்ளுவர், பாரதியார், ஔவையார் என்ற புகழ்பெற்ற பல்வேறு தலைவர்கள், புலவர்கள் உள்ளிட்டோரின் சிலைகள் அமைந்துள்ளன. அத்துடன் மறைந்த தமிழக முதல்வர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் சமாதிகளும் மெரினாவில்தான் அமைந்துள்ளன. உழைப்பாளர் சிலை, லைட் ஹவுஸ் எனப்படும் கலங்கரை விளக்கம் உள்ளிட்டவையும் இங்குள்ளன. இதன் காரணமாக, சென்னை மாநகரின் சுற்றுலா தலமாகவும் இக்கடற்கரை திகழ்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள், மெரினா கடற்கரைக்கு சென்று தலைவர்களின் சமாதிகளை காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *