mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / ராகுலை ராஜீவ் ஆக்கிய ஊரடங்கு!

ராகுலை ராஜீவ் ஆக்கிய ஊரடங்கு!

April 17, 2020 10:36 am

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (ஏப்ரல் 16) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்வில் வந்து, கொரோனா வைரஸ் தடுப்புக்காக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கினார். லைவ்வில் வந்த ராகுலைப் பார்த்து காங்கிரஸார் மட்டுமின்றி, பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர். பேசுவது ராகுல் காந்தியா அல்லது ராஜீவ் காந்தியா என்பதுதான் அவர்களின் குழப்பத்துக்குக் காரணம். ஆம்.. தன் நடுத்தர வயதில் ராஜீவ் காந்தி எப்படி இருந்தாரோ அச்சு அசலாக அதேமாதிரி தோற்றத்தில் இருந்தார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி எப்போதுமே தன் தலையில் அதிக முடி இல்லாதவாறு பார்த்துக் கொள்வார். ஒட்ட வெட்டியிருப்பார். ஆனால் ஊரடங்கு காரணமாக ராகுல், தான் வழக்கமாக முடி திருத்தும் இடத்துக்குச் செல்லவில்லை. செல்ஃப் ஷேவிங் செய்துகொள்வதோடு சரி… வெளி நபர்களையும் ராகுல் காந்தி வீட்டுக்குள் பாதுகாப்பு காரணமாக அனுமதிக்கவில்லை. இதனால் கடந்த இருபது நாட்களாக தலைமுடி வளர்ந்துவிட, அதே தோற்றத்தோடு லைவுக்கு வந்தார் ராகுல். அப்போதுதான் பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்களும் இன்ப அதிர்ச்சியாகி, சிலர் கண்ணீரே விட்டனர். ஏனென்றால் நன்கு தலைமுடி வளர்ந்த நிலையில் 80 களில் தன் தந்தை ராஜீவ் காந்தியைப் போலவே மாறியிருந்தார் ராகுல். அடுத்த சில நிமிடங்களில் பரவசப்பட்ட காங்கிரசார் தங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் டிபியாகவும், ஸ்டேட்டஸாகவும் ராகுல் காந்தியின் புதிய ராஜீவ் கெட்டப்பை வைத்தனர். இதேபோலவே தொடருமாறும், இந்தத் தோற்றம் நாட்டின் தோற்றத்தையே மாற்றும் என்றும் சமூக தளங்களில் கருத்துகளை இட்டு வருகின்றனர். ராகுலின் இந்த புதிய கெட்டப்பைப் பார்த்து சோனியாவும் நெகிழ்ந்துவிட்டார் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *