mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / அரசியல்

அரசியல்

பத்தாம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடைபெறும்: செங்கோட்டையன்

Published on:April 21, 2020 11:48 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

பத்தாம் வகுப்புக்கான தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, தேசிய ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் …

Read More »

சானிட்டைசர், சோப்புகளுக்கு ஜிஎஸ்டி கூடாது: ராகுல் காந்தி!

Published on:April 21, 2020 11:32 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து சாதனங்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல பொருட்களுக்கும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், சானிட்டைசர், சோப்பு போன்ற கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கு வரிவிலக்கு …

Read More »

ராகுலை ராஜீவ் ஆக்கிய ஊரடங்கு!

Published on:April 17, 2020 10:36 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (ஏப்ரல் 16) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்வில் வந்து, கொரோனா வைரஸ் தடுப்புக்காக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கினார். லைவ்வில் வந்த ராகுலைப் பார்த்து காங்கிரஸார் மட்டுமின்றி, பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர். பேசுவது ராகுல் காந்தியா அல்லது ராஜீவ் காந்தியா என்பதுதான் அவர்களின் குழப்பத்துக்குக் காரணம். ஆம்.. தன் நடுத்தர …

Read More »

நாடு முழுவதும் மூன்றாகப் பிரியும் மாவட்டங்கள்!

Published on:April 16, 2020 10:18 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

நாடு முழுவதும் மாவட்டங்கள் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,933 ஆக உள்ளது. அதில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,197 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,344 ஆகவும் உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 392 …

Read More »

கொரோனா பணிகளைக் கண்காணிக்கும் சிறப்பு அதிகாரிகள்!

Published on:April 14, 2020 11:44 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா தொற்று பரவாமல் மக்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு அளித்து வரும் நிதி மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் முறையாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்களா என்பதைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் சில மாவட்ட ஆட்சியர்கள் உணர்வுப் பூர்வமாக பணிசெய்யவில்லை, கொரோனா பெயரை வைத்து மாவட்டங்களில் உள்ள பெரிய நிறுவனங்களின் முதலாளிகளிடம் ஆப் தி ரெக்கார்டாக பணம் வசூலித்து வருவதாகவும் அரசு ஒதுக்கிய நிதியைச் சரியான …

Read More »

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர்

Published on:April 14, 2020 11:41 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வர இருந்தது. எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. தமிழகத்தில் ஏப்ரல் 30 …

Read More »

படகு வீடுகளைத் தனிமை வார்டுகளாகப் பயன்படுத்த கேரள அரசு முடிவு!

Published on:April 13, 2020 10:43 am

Breaking News, E.Paper, அரசியல், ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா பாதிப்பை பெருமளவு கேரள அரசு கட்டுப்படுத்தி வருகிறது. மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஆலப்புழாவில் உள்ள படகு வீடுகளைத் தனிமை வார்டுகளாகப் பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் நோய் அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி தங்க வைக்க செய்துள்ள ஏற்பாடுகள் பற்றி …

Read More »

கொரோனா பரவுவதற்கு காரணம் திமுகதான்: அமைச்சர் ஜெயக்குமார்

Published on:April 13, 2020 10:39 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா பரவுவதற்கு காரணம் திமுகதான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட, அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் சித்திரித்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது’ எனப் பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, சந்தர்ப்பவாதம் பற்றி முதலமைச்சர் பேசலாமா என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பிய …

Read More »

ஊரடங்கு நீட்டிப்பை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின்

Published on:April 11, 2020 11:36 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஊரடங்கு நீட்டிப்பை முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. ஆனாலும், கொரோனா பெருந்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா …

Read More »

அதிகாரிகளின் பாராட்டுக்கு உள்ளாகியிருக்கிறது தமிழக காவல் துறை!

Published on:April 9, 2020 10:53 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் (ஏப்ரல் 8) நடந்த நிலையில், ‘இந்தியா மேலும் மிகக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்துக்கு முன்னரும் பின்னரும் உள்துறை அமைச்சக டெல்லி அதிகாரிகளின் பாராட்டுக்கு உள்ளாகியிருக்கிறது தமிழக காவல் துறை. 144 தடை உத்தரவுக்குப் பின்னால் தமிழக காவல் துறை வீதியில் நடமாடுபவர்களைத் …

Read More »