mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

1,350 கிலோ போதை பொருள் கர்நாடகாவில் பறிமுதல்…

Published on:September 11, 2020 10:11 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கர்நாடகாவில் 1,350 கிலோ போதை பொருளை பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கலபுரகி, கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் கால்கி பகுதியில் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. பெங்களூரு நகர மத்திய பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், பண்ணையில் நிலத்திற்கு அடியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது …

Read More »

பத்தாம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடைபெறும்: செங்கோட்டையன்

Published on:April 21, 2020 11:48 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

பத்தாம் வகுப்புக்கான தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, தேசிய ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் …

Read More »

மறைந்த மருத்துவர்: மறக்க நினைக்காத லாரன்ஸ்

Published on:April 21, 2020 11:43 am

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த மருத்துவர் ஜெயமோகனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக உதவி என்று கூறினாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் மனத்தில் வரும் நபராகவே மாறிவிட்டார் நடிகர் லாரன்ஸ். ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் முன்னணி நடிகர்கள்கூட உதவிட முன்வராத நிலையில் லாரன்ஸ் செய்துவரும் உதவிகள் அனைவரையும் நெகிழ வைக்கிறது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் …

Read More »

சானிட்டைசர், சோப்புகளுக்கு ஜிஎஸ்டி கூடாது: ராகுல் காந்தி!

Published on:April 21, 2020 11:32 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து சாதனங்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல பொருட்களுக்கும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், சானிட்டைசர், சோப்பு போன்ற கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கு வரிவிலக்கு …

Read More »

கடன் வாங்கி மக்களுக்கு உதவுவேன்: பிரகாஷ்ராஜ்!

Published on:April 21, 2020 11:25 am

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ், தன்னுடைய நிதி ஆதாரங்கள் குறைந்து விட்டதால், இனி கடன் வாங்கி மக்களுக்கு உதவுவேன் எனக் கூறியிருக்கிறார். கொரோனா தொற்றுநோய் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, பிரகாஷ் ராஜ் களத்திலும் சரி, தனது சமூக வலைதளத்திலும் சரி, தீவிரமாக இயங்கி வருகிறார். அவர் ஈடுபட்டுள்ள சில நிவாரணப் பணிகளைப் பற்றி தெரியப்படுத்துவது, விதிமுறைகளை மீறும் குடிமக்களின் பொறுப்பற்ற செயலை விமர்சிப்பது, தனது குடும்பத்தினரிடம் …

Read More »

ஐபிஎல்- 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!

Published on:April 17, 2020 5:07 pm

Breaking News, E.Paper, செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல்- 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. “போட்டிகளை நடத்துவதை விட நாட்டு மக்கள், மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் அனைவரின் உடல் நலனே முக்கியம். எப்போது பாதுகாப்பானது என அறிவிக்கப்படுகிறதோ அப்போது போட்டியை நடத்த பிசிசிஐ மற்றும் அணிகளின் உரிமையாளர்கள், …

Read More »

சென்னை வந்த 24,000 ரேபிட் கிட்ஸ்!

Published on:April 17, 2020 5:02 pm

Breaking News, E.Paper, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா கண்டறியும் சோதனை விரைவாக நடைபெறவில்லை என்றும், குறைந்த அளவிலான சோதனைகளே நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஊரடங்கை நீட்டித்துவிட்டு, கொரோனா பரிசோதனை விரைவாக செய்யப்படவில்லை என்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு அர்த்தமே இல்லை என்று பலரும் கூறினர். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் விரைவு பரிசோதனை …

Read More »

வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Published on:April 17, 2020 10:50 am

Breaking News, E.Paper, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கோயம்புத்தூர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட …

Read More »

சீனாவிலிருந்து வந்த தரமற்ற பாதுகாப்பு உபகரணங்கள்!

Published on:April 17, 2020 10:46 am

Breaking News, E.Paper, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான உடைகள் உள்ளிட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (Personal Protection Equipment) இந்தியாவில் போதுமான அளவு இல்லை. இதனால், அதன் தயாரிப்பை இந்தியா அதிகரித்துள்ளது. அத்தோடு, பிற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து வருகிறது. அதில் அண்டை நாடான சீனா முதன்மையான இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு வழங்கப்பட்ட பல பாதுகாப்பு உபகரணங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. எனினும், அவற்றை பாதுகாப்பு தர …

Read More »

ராகுலை ராஜீவ் ஆக்கிய ஊரடங்கு!

Published on:April 17, 2020 10:36 am

Breaking News, E.Paper, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (ஏப்ரல் 16) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்வில் வந்து, கொரோனா வைரஸ் தடுப்புக்காக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கினார். லைவ்வில் வந்த ராகுலைப் பார்த்து காங்கிரஸார் மட்டுமின்றி, பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர். பேசுவது ராகுல் காந்தியா அல்லது ராஜீவ் காந்தியா என்பதுதான் அவர்களின் குழப்பத்துக்குக் காரணம். ஆம்.. தன் நடுத்தர …

Read More »