mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / தேசியம்

தேசியம்

இந்திய சுகாதாரத்துறை புதிய உத்தரவு – கொரோனா வைரஸ் “நெகட்டிவ்” என வந்தாலும் மறுபரிசோதனை கட்டாயம்

Published on:September 11, 2020 11:33 am

Breaking News, E.Paper, தேசியம் 0

கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு, ரேபிட் டெஸ்டுகளில் தொற்று இல்லை என்று முடிவு வந்துவிட்டால் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி உள்ளது. பல பெரிய மாநிலங்கள் ஏற்கனவே இருக்கும் இந்த விதிமுறையை பின்பற்றுவது இல்லை என்று இந்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு விஷயங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. …

Read More »

9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் செல்லலாம்:

Published on:September 10, 2020 11:57 am

Breaking News, E.Paper, தேசியம் 0

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 21-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதுடெல்லி, கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் மாதந்தோறும் மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது, 4-ம் கட்ட தளர்வுகள் அமலில் உள்ளன. கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள், இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், பகுதி …

Read More »

லடாக் எல்லையில் பதற்றம் நீடிப்பு: சீனா, அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும்

Published on:September 10, 2020 11:40 am

Breaking News, E.Paper, தேசியம் 0

லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனா அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி, லடாக்கில் இந்திய, சீன எல்லையில் கடந்த மே மாதம் தொடங்கி சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. ஆனால் தனது தவறை மறைப்பதற்கு இந்தியா மீது அபாண்டமாக பழிபோடுகிறது. கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும், சென்ற ஆகஸ்டு 29-ந் தேதி கிழக்கு லடாக் பகுதியில் …

Read More »

ஏழைகளுக்கு பிரதமர் ரூ.68 ஆயிரம் கோடி நிதி உதவி…!

Published on:September 9, 2020 11:44 am

Breaking News, E.Paper, தேசியம் 0

பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் 42 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 820 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் 42 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 820 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிவாரண …

Read More »

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது.

Published on:September 8, 2020 11:33 am

Breaking News, E.Paper, தேசியம் 0

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை தாண்டுள்ளது. நாட்டில் கொரோனா பரிசோதனை குறித்து செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், செப்டம்பர் 7-ம் தேதி வரை நாட்டில் ஒட்டுமொத்தமாக 5,06,50,128 -கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 10,98,621 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கொரோனாவால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கும்: அமெரிக்கா!

Published on:April 2, 2020 10:18 am

Breaking News, E.Paper, அரசியல், ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது, வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே …

Read More »

உலகப் பொருளாதாரம் கீழ்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது: ஐ.எம்.எப்.

Published on:March 28, 2020 10:11 am

Breaking News, E.Paper, அரசியல், உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா எதையும் எதிர்த்துப் போராடும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இரவு, “மூடப்பட்ட வென் டிலேட்டர் நிறுவனங்கள் மீண்டும் தங்கள் உற்பத்தியைத் தொடங்குங்கள்… ம்… வேகமாக’ என்று அவசர ட்விட் செய்துள்ளார். ஏனெனில் அமெரிக்கா கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது. இதனால்தான் டிரம்ப் …

Read More »

144 தடை உத்தரவை மீறிய 8,136 பேர் மீது வழக்கு!

Published on:March 27, 2020 10:56 am

Breaking News, E.Paper, mavattam, அரசியல், ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

144 தடை உத்தரவை மீறியதற்காக 8,136 பேர் மீது தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று (மார்ச் 26) இரண்டாவது நாளை எட்டியுள்ளது. பேருந்து, ஆட்டோக்கள் இயங்காததால் போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. அவசியமின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் …

Read More »

கொரோனா பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை!

Published on:March 14, 2020 10:22 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடர் மற்றும் மார்ச் இறுதியில் தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்த அறிவிப்பால் முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி மழை பாதிப்பால் நடைபெறாமல் போனது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த போட்டிகளை கொரோனா …

Read More »

கொரோனாவிலிருந்து தப்பிக்க 10 வழிமுறைகள்!

Published on:March 5, 2020 10:48 am

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

ஒரு சிறிய வைரஸ்; ஆம், மிகச்சிறியது. தலை முடியின் தடிமனைவிட தொள்ளாயிரம் மடங்கு சிறியது இந்த கொரோனா வைரஸ். ஆனால் ஒருவரிடமிருந்து ஒருவருக்குத் தாவி, உலகையே பயமுறுத்தி வருகிறது. இதுவரை 81 நாடுகளில்(பிரதேசங்கள் உட்பட) அதிகாரப்பூர்வமாக பரவியிருக்கிறது கொரோனா. இதுவரை பார்க்காத புதிய வைரஸ் என்பதால், இதற்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் பல்வேறு நாடுகளின் சுகாதாரத் துறைகளும் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இல்லை என்று ஆயாசப்படுவதற்கு முன்பாக 28 …

Read More »