mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / வர்த்தகம்

வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.39,360

Published on:September 11, 2020 10:20 am

Breaking News, E.Paper, வர்த்தகம் 0

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. …

Read More »

ரூ.1.19 லட்சம் கோடி நஷ்டம்.

Published on:September 9, 2020 5:02 pm

Breaking News, E.Paper, வர்த்தகம் 0

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச் சந்தை! முதலீட்டாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் கோடி நஷ்டம். இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை, எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 51.88 புள்ளிகளை இழந்தது. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.1.19 லட்சம் கோடி நஷ்டத்தைச் சந்தித்தனர். காலையில் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி நேர்மறையாக இருந்து வந்தது. பிற்பகலில் …

Read More »

விஸ்கோஸ் பஞ்சு மீதான வரியை நீக்க வேண்டும்: ஜவுளித் தொழில்முனைவோர் எதிர்பார்ப்பு…

Published on:September 8, 2020 12:19 pm

Breaking News, E.Paper, வர்த்தகம் 0

“சர்வதேச ஜவுளி சந்தையில் இந்தியா போட்டியிடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தாலும் ஏதாவது ஒரு சிறு இடையூறு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் பாலியெஸ்டரைப்போலவே விஸ்கோஸ் பஞ்சு மீதான குவிப்பு வரி நீக்கப்பட்டால் உலக ஜவுளி சந்தையில் சீனாவுக்கு சவால் அளிக்க முடியும்’ என்கின்றனர் ஜவுளித் தொழில்முனைவோர். நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 11 சதவீதமும், மொத்த தொழில் துறை உற்பத்தியில் 12 சதவீதமும் ஜவுளித் துறையின் பங்கு உள்ளது. சர்வதேச அளவில் …

Read More »

வெங்காயத்தை பதுக்கினால் சட்டப்படி நடவடிக்கை!

Published on:December 11, 2019 10:24 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம், வர்த்தகம் 0

வெங்காய பதுக்கலை தடுக்க மாநிலம் முழுவதும் 33 குழுக்கள் அதிரடி ஆய்வுவில் ஈடுபட்டிருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு எஸ்.பி சாந்தி தெரிவித்திருக்கிறார். வெங்காயத்தை பதுக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்திருக்கிறார். சென்னை நந்தனத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் அதன் காவல் கண்காணிப்பாளர் சாந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வெங்காய விலை அதிகரித்துள்ள சூழலில், வியாபாரிகள் வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுகிறார்களா என்பதை …

Read More »

சந்தானத்தின் ‘டகால்டி’ டீசர்!

Published on:December 2, 2019 4:22 pm

Breaking News, E.Paper, mavattam, சினிமா, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டகால்டி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சங்கரின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தைக் கையாண்டுள்ளார். டகால்டி படத்தின் டீசர் நேற்று ( டிசம்பர் 1) மாலை 4: 30 மணிக்கு வெளியிடப்பட்ட நிலையில் 1.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, ஒரு லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. சந்தானத்தின் சொந்த நிறுவனமான …

Read More »

ஏர்டெல், வோடஃபோன்: கட்டண உயர்வு!

Published on:December 2, 2019 10:31 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

ஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜியோ நிறுவனத்தின் இலவச டேட்டா , வாய்ஸ்கால் மற்றும் குறைந்தக் கட்டண சேவை ஆகியவற்றால் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து அண்மையில் ஜியோ நிறுவனம் இலவச வாய்ஸ்கால் சேவையை நிறுத்தியது. நிமிடத்துக்கு 6 பைசா என்ற வகையில் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது முன்னணி தொலைத்தொடர்பு …

Read More »

வோடாபோன், ஏர்டெல் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்!

Published on:November 15, 2019 12:03 pm

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த இரண்டாம் காலாண்டில், தொலைபேசி சேவை நிறுவனங்களான ஏர்டெல் ரூ. 23,045 கோடி, வோடபோன்-ஐடியா ரூ.50,921 கோடி என பெருநஷ்டம் அடைந்துள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஆண்டு மொத்த வருவாய் (ஏஜிஆர்) கணக்கீட்டில் தொலைத் தொடர்புச் சேவை அல்லாத வர்த்தகங்களின் வருவாய்களையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம் உரிமத்தொகை, அலைக்கற்றைக்(ஸ்பெக்ட்ரம்) கட்டணம் ஆகியவை அரசுக்குச் …

Read More »

தொழிற்துறை உற்பத்தி வீழ்ச்சி!

Published on:November 12, 2019 11:44 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம், வர்த்தகம் 0

உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 4.3 சதவிகிதமாகக் குறைந்தது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தரவுகளின்படி, தற்போது உற்பத்தித் துறையில் மந்தநிலை காணப்படுகிறது. இது ஒரு வருடத்துக்கு முன்பிருந்த 4.8 சதவிகித வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 3.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மின் உற்பத்தித் துறையைப் பொறுத்தமட்டில், செப்டம்பர் மாதத்தில் உற்பத்தி 2.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த வருடத்தில் 8.2 …

Read More »

ஜெயம் ரவியின் ‘பூமி’ ஃபர்ஸ்ட் லுக்!

Published on:November 2, 2019 1:36 pm

Breaking News, E.Paper, சினிமா, செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘பூமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கோமாளி படத்தில் ‘அம்னீஷியா’வால் பதினாறு வருட வாழ்க்கையை இழந்த ஜெயம் ரவி, இன்றைய காலத்துடன் தன்னைப் பொருத்திக்கொள்ள அல்லாடும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவி ஹீரோ இமேஜுக்கான படங்களை விட, சமூக அக்கறை கொண்ட படங்களை சமீப வருடங்களில் அதிகம் தேர்ந்தெடுத்து …

Read More »

இன்ஃபோசிஸ் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

Published on:October 22, 2019 1:18 pm

Breaking News, E.Paper, செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

இன்ஃபோசிஸின் அடையாளத்தை வெளிப்படுத்தாத ஊழியர்கள் சிலர், அதன் தலைமை அதிகாரிகளின் நெறிமுறையற்ற நடைமுறைகளைக் குற்றம்சாட்டியுள்ளனர். முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோரின் மீது பெயரை வெளிப்படுத்த விரும்பாத இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். தங்களை ‘நெறிமுறை ஊழியர்கள்’ என அழைத்துக்கொள்ளும் பெயரை வெளியிட விரும்பாத சில இன்ஃபோசிஸ் ஊழியர்கள், …

Read More »