mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / mavattam

mavattam

பெரம்பலூர் அருகே டாஸ்மாக்கை உடைத்து மது பாட்டில்கள் கடத்தல்!

Published on:April 9, 2020 11:03 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

பெரம்பலூர் அருகே டாஸ்மாக்கை உடைத்து மது பாட்டில்கள் கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் புகுந்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் திருடப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து, பல டாஸ்மாக்குகளில் இருந்த மது பாட்டில்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டன. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. …

Read More »

விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மாயம்!

Published on:April 9, 2020 10:57 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

விழுப்புரம் அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 20 பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 20 பேர் தொடர்பான விவரங்களை மாவட்ட சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 30 வயதான நபர் தப்பி ஓடியதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து தனிப்படை அமைத்து அந்த …

Read More »

சென்னைக்கு ரெட் அலர்ட் – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்!

Published on:March 31, 2020 11:16 am

Breaking News, E.Paper, mavattam, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதோ, அதுபோன்று இந்த நோய்த் தொற்று குறித்த வதந்திகளும் பஞ்சமில்லாமல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 24 பேரும், சென்னையில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை, சேலம், வேலூர் உட்பட …

Read More »

பெட்ரோல் பங்குகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது: அரசு!

Published on:March 28, 2020 10:15 am

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. சுமார் 38 பேர் தமிழகத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், மக்கள் அதனை மீறி வெளியே செல்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும் வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனிடையே நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வளாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். இதன் …

Read More »

வங்கி கடன்களுக்கு 3 மாதகால அவகாசம்: ரிசர்வ் வங்கி

Published on:March 27, 2020 6:38 pm

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகள் கடன் வசூல் செய்வதை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 3ஆவது நாளை எட்டியுள்ளது. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்காததாலும், வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கத் துவங்கியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 27) பேசிய ரிசர்வ் …

Read More »

மொபைல் டேட்டா உபயோகத்தை குறையுங்கள்: நெட்வொர்க் நிறுவனங்கள்!

Published on:March 27, 2020 6:29 pm

Breaking News, E.Paper, mavattam, ஆராய்ச்சி, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துள்ளதால் மொபைல் டேட்டா அதிகரித்திருப்பதாகவும், இதனால் தொழில்நுட்ப ரீதியாகச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தும், செல்போன்களில் உள்ள ஹாட் ஸ்டார் உள்ளிட்ட செயலிகளில் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளையும் பார்த்தும் மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். இதுமட்டுமின்றி ஐடி நிறுவனங்கள், மின்னணு ஊடகங்கள் தங்களது ஊழியர்களை …

Read More »

கொரோனா பாதிப்பில் சீனாவை தள்ளிய அமெரிக்கா!

Published on:March 27, 2020 6:23 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

சீனாவை விட அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரத்தில் கடந்த டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், உலகெங்கிலும் 197 நாடுகளில் 5,00,000 அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய புள்ளிவிவரத்தின்படி சீனாவில் 81,782 பேரும், இத்தாலியில் 80,589 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த இரு நாடுகளையும் விஞ்சக்கூடிய வகையில், ஐக்கிய அமெரிக்காவில் 85,500க்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக …

Read More »

புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க உத்தரவு: முதல்வர்!

Published on:March 27, 2020 5:27 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், ஆராய்ச்சி, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை 29 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 35ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று புதிதாக 6 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. …

Read More »

புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க உத்தரவு: முதல்வர்!

Published on:March 27, 2020 5:25 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், ஆராய்ச்சி, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை 29 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 35ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று புதிதாக 6 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மதுரை …

Read More »

144 தடை உத்தரவை மீறிய 8,136 பேர் மீது வழக்கு!

Published on:March 27, 2020 10:56 am

Breaking News, E.Paper, mavattam, அரசியல், ஆராய்ச்சி, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

144 தடை உத்தரவை மீறியதற்காக 8,136 பேர் மீது தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று (மார்ச் 26) இரண்டாவது நாளை எட்டியுள்ளது. பேருந்து, ஆட்டோக்கள் இயங்காததால் போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. அவசியமின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் …

Read More »