mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா உறுதி

டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா உறுதி

April 11, 2020 11:39 am

தமிழகத்தில் மருத்துவத் துறைக்கே தலைமை அலுவலகமாக செயல்படும் டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் என்றழைக்கப்படும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் அமைந்துள்ளது. இங்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை (டிபிஹெச்), காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதார திட்டம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிஎம்எஸ் அலுவலகத்தில் எழுத்தாளராக பணியாற்றி வந்த 45 வயதான ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக டிஎம்எஸ் வளாகத்தில் தான் தினசரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிப்பார் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ். நேற்று தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி அளித்தார். இதுபோன்று மருத்துவத் துறையைச் சார்ந்த பல முக்கிய அதிகாரிகள் வந்து செல்லும் வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னதாகவே இந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இவர் டெல்லி சென்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவரது பயண விவரங்கள் மற்றும் யார் யாரை அவர் சந்தித்தார் உள்ளிட்ட விவரங்களைச் சுகாதாரத் துறையினர் ஆராயத் தொடங்கியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *