mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / பிரபல பாலிவுட் பாடகிக்கு கொரோனா!

பிரபல பாலிவுட் பாடகிக்கு கொரோனா!

March 21, 2020 10:13 am

கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் பொது இடங்களுக்குச் சென்று வந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில், பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 15ஆம் தேதி லண்டனில் இருந்து லக்னோ வந்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை இவர் பின்பற்றவில்லை என்றும், வெளிநாடு சென்று வந்த பயண விவரங்களை மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது, தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அவர் லக்னோவில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா , பாஜக எம்பி துஷ்யந்த் சிங் உட்பட பல முக்கிய அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர். தற்போது கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பார்ட்டியில் கலந்துகொண்ட அரசியல் பிரபலங்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இதில் துஷ்யந்த் சிங் நாடாளுமன்றத்துக்குச் சென்று வந்ததாலும், குடியரசுத் தலைவர் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டதாலும் இவ்விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகப் பாடகி கனிகா கபூர் மீது லக்னோ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நோய்த் தொற்று பரவ வாய்ப்புகள் ஏற்படும் வகையில் கவனக்குறைவாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் அவர் மீது சரோஜினி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லக்னோ காவல் ஆணையர் சுர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *