mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / கொரோனாவால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கும்: அமெரிக்கா!

கொரோனாவால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கும்: அமெரிக்கா!

April 2, 2020 10:18 am

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது, வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே இந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்ப முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. ”இதுவரை மருந்து மாத்திரைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்தும் நமது நடவடிக்கைகளில் தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய நடவடிக்கைகளையும், பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதன் மூலம் இந்த மிகப்பெரிய தொற்று நோயிலிருந்து தப்பிக்க முடியும். இவற்றை அடுத்த 30 நாட்களுக்குக் குறைந்த பட்சம் கடைப்பிடித்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளோம்” என வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் டெபோரா பிர்க்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கர்கள் பெரிய உயிரிழப்புகளைச் சந்தித்தாக வேண்டிய நிலையில் இருப்பதாக அமெரிக்காவின் தொற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் முன்னணி மருத்துவர் ஆண்டனி தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

”தற்போது நாம் எதிர்கொள்ளக் கூடிய மரண விகிதம் நாம் சந்திக்கக்கூடிய நிகழ்வாகும். நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இது கண்டிப்பாக நடந்தே தீரும்” என ஆண்டனி கூறியுள்ளார். நோய் பரவலில் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி ஆகிய மாகாணங்கள் மற்ற அனைத்து மாகாணங்களையும் விட அதிகபட்ச வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இதன் அடிப்படையில் நியூயார்க் நியூஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய மாகாணங்களில் அதிக அளவிலான உயிர்ப்பலி இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த புள்ளிவிவரங்களின்படி ஆகஸ்ட் மாத துவக்கத்திலேயே 84 ஆயிரம் அமெரிக்கர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள் எனவும், ஆகஸ்ட் 15 ஆம் தேதிகளில் அதிகபட்ச உயிரிழப்புகள் நிகழும் எனவும் அதற்குப் பிறகு மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. டெபோரா இதுகுறித்து மேலும் கூறும்போது, அமெரிக்க மக்கள் வெளியில் செல்லும்போது குறைந்தது 6 அடி தூரத்தை மற்றவர்களிடமிருந்து பின்பற்றுவார்கள் என நம்புகிறோம் அதனால்தான் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார் ஆறடி இடைவெளி பின்பற்றும்போது வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் கூறியுள்ளார் வைரஸ் பரவல் குறைந்து வருவதாக இத்தாலியிலிருந்து வெளிவரும் தகவல்கள் அமெரிக்காவிற்கு புதிய நம்பிக்கையைத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்த புள்ளிவிவரங்கள் அமெரிக்க மக்களிடையே பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தகவல்களால் சோர்வு அடைந்து விடக்கூடாது எனவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் நல்ல பலனை அளிக்கும் என அந்நாட்டு அரசு நம்பிக்கையூட்டியுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *