mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / நாடு முழுவதும் மூன்றாகப் பிரியும் மாவட்டங்கள்!

நாடு முழுவதும் மூன்றாகப் பிரியும் மாவட்டங்கள்!

April 16, 2020 10:18 am

நாடு முழுவதும் மாவட்டங்கள் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,933 ஆக உள்ளது. அதில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,197 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,344 ஆகவும் உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா நிலவரங்கள் குறித்து (ஏப்ரல் 15) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், “இந்தியாவில் இதுவரை கொரோனாவின் மூன்றாவது நிலையான சமூகப் பரவல் ஆரம்பிக்கவில்லை. ஆனால், களத்தில் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவதுதான் பெரிய சவாலாக இருந்து வருகிறது. நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் தீவிர கொரோனா தொற்று பாதித்த (Hotspots) மாவட்டங்களாக அறியப்பட்டுள்ளன. 207 மாவட்டங்கள் தொற்று பரவ சாத்தியமுள்ள (Potential Hotspots) மாவட்டங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். நாடு முழுவதும் மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், “கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்கள் (ஹாட்ஸ்பாட்ஸ்), தொற்று அல்லாத ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாவட்டங்கள் (நான் -ஹாட்ஸ்பாட்ஸ்) மற்றும் கொரோனாவால் பாதிக்கப்படாதவர்கள் உள்ள பசுமை மண்டல (க்ரீன் ஸோன்) மாவட்டங்கள் எனப் பிரிக்கப்படவுள்ளன. ஹாட்ஸ்பாட்ஸ் என்பது அதிக எண்ணிக்கையிலான கொரோனா வழக்குகள் பதிவான மாவட்டம் அல்லது கொரோனா வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் எனப் பொருள் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாவட்டங்கள், குறைந்த அளவில் உள்ள மாவட்டங்கள், பாதிப்பே இல்லாத மாவட்டங்களை முறையே சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என வகைப்படுத்தியுள்ளது. இதனிடையே சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தொடங்கியது, உடனடி நடவடிக்கைகள் எடுத்த நாடுகளில் இந்தியா முதன்மையானது. ஜனவரி 8ஆம் தேதி நாங்கள் பணியாற்ற தொடங்கினோம். ஜனவரி 17 அன்று, நாங்கள் சுகாதார ஆலோசனைகளை வழங்கினோம். அடுத்த 2-3 வாரங்கள் கொரோனாவைக் கையாள்வதில் மிக முக்கியமான காலமாக இருக்கும். தற்போது, இந்தியாவில் 400 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை” என்று தெரிவித்தார்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *