mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / கடன் வாங்கி மக்களுக்கு உதவுவேன்: பிரகாஷ்ராஜ்!

கடன் வாங்கி மக்களுக்கு உதவுவேன்: பிரகாஷ்ராஜ்!

April 21, 2020 11:25 am

நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ், தன்னுடைய நிதி ஆதாரங்கள் குறைந்து விட்டதால், இனி கடன் வாங்கி மக்களுக்கு உதவுவேன் எனக் கூறியிருக்கிறார். கொரோனா தொற்றுநோய் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, பிரகாஷ் ராஜ் களத்திலும் சரி, தனது சமூக வலைதளத்திலும் சரி, தீவிரமாக இயங்கி வருகிறார். அவர் ஈடுபட்டுள்ள சில நிவாரணப் பணிகளைப் பற்றி தெரியப்படுத்துவது, விதிமுறைகளை மீறும் குடிமக்களின் பொறுப்பற்ற செயலை விமர்சிப்பது, தனது குடும்பத்தினரிடம் செலவிடும் அழகிய தருணங்களைப் பகிர்ந்து கொள்வது, அவரது பண்ணையிலிருந்து கிடைக்கும் மகசூல் என மக்களுக்கு மிகவும் உற்சாகமும் பாடமும் அளிக்கும் பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

அத்துடன் மக்கள் விழிப்புணர்வோடு செயல்படவும், வெளியில் செல்லாமல் இருக்கவும் அறிவுறுத்தி வருகிறார் பிரகாஷ்ராஜ். கடந்த வாரம், தனது அறக்கட்டளை மூலம் பயணடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை பற்றியும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் 30 வெளிமாநில மக்களை தனது பண்ணையில் பராமரித்து வந்துள்ள செய்தியையும் பகிர்ந்தார். மேலும், பொதுமக்களையும் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்யுங்கள் என கோரிக்கையும் விடுத்தார் பிரகாஷ் ராஜ். இந்நிலையில்,(ஏப்ரல் 20) அவர் வெளியிட்ட பதிவில், “எனது நிதி ஆதாரங்கள் குறைந்து வருகின்றன. ஆனாலும் கடன் பெற்று இதனை தொடருவேன். ஏனென்றால் மீண்டும் என்னால் சம்பாதிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். மனிதநேயம் இச்சமயத்திலும் உயிரோடிருக்கும் பட்சத்தில், இணைந்த கைகளுடன் இதனை எதிர்த்து போராடுவோம்” எனக் கூறியுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்தப் பதிவு பலரையும் பாராட்ட வைத்துள்ளது. மேலும், அவரது அறக்கட்டளையின் வங்கிக் கணக்கை பகிர்ந்து கொள்ளுமாறும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை உடனடியாக வழங்குகிறோம் என்றும் பலரும் கமெண்டில் கூறி பிரகாஷ் ராஜை நெகிழ வைத்துள்ளனர்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *