mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / ஐபிஎல்- 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!

ஐபிஎல்- 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!

April 17, 2020 5:07 pm

பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல்- 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. “போட்டிகளை நடத்துவதை விட நாட்டு மக்கள், மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் அனைவரின் உடல் நலனே முக்கியம். எப்போது பாதுகாப்பானது என அறிவிக்கப்படுகிறதோ அப்போது போட்டியை நடத்த பிசிசிஐ மற்றும் அணிகளின் உரிமையாளர்கள், ஒளிபரப்பு உரிமையாளர், விளம்பரதாரர்கள், பங்குதாரர்கள் என அனைவரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளோம்” என்று பிசிசிஐ கூறியுள்ளது.தற்போது உள்ள சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து போட்டிகளை நடத்துவதற்கான தேதியை முடிவு செய்ய இருப்பதாகவும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் ஆலோசனை பெறப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் அதன் முதல் அட்டவணைப்படி மார்ச் 29ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க இருந்தது. முதல் போட்டியாக 2019 ஆம் ஆண்டின் இறுதி போட்டியாளர்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டி காலி மைதானங்களில் நடைபெற்று, தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகலாம் என்று ஆலோசிக்கப்பட்டிருந்தது. அந்த முடிவும் பின்னர் கைவிடப்பட்டது.

ஐபிஎல் போட்டிகளில் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பலர் விளையாடுவதே அதன் முக்கியமான அம்சமாகும். இந்த போட்டி ரத்து செய்யப்படும் பட்சத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகள், ஊடக உரிமைகள், அணி உரிமையாளர்களின் வருவாய், வீரர்களுக்கான சம்பளம், ஹோட்டல் மற்றும் பயணச் செலவு மற்றும் விளம்பர உரிமையாளர்கள் என அனைத்து செலவுகளும் சேர்த்து பத்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும். இதில் அதிகப்படியான நஷ்டம் போட்டியின் நடத்துனராக இருக்கும் பிசிசிஐக்கு இருக்கும் என தெரிகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்கனவே ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன, மேலும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளான விம்பிள்டன், ப்ரென்ச் ஓபன், பார்முலா 1 போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *