mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / மறைந்த மருத்துவர்: மறக்க நினைக்காத லாரன்ஸ்

மறைந்த மருத்துவர்: மறக்க நினைக்காத லாரன்ஸ்

April 21, 2020 11:43 am

சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த மருத்துவர் ஜெயமோகனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக உதவி என்று கூறினாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் மனத்தில் வரும் நபராகவே மாறிவிட்டார் நடிகர் லாரன்ஸ். ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் முன்னணி நடிகர்கள்கூட உதவிட முன்வராத நிலையில் லாரன்ஸ் செய்துவரும் உதவிகள் அனைவரையும் நெகிழ வைக்கிறது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் திரைத்துறையினர், ஏழை, எளிய மக்கள் எனப் பலருக்கும் நிதி உதவிகளை லாரன்ஸ் செய்துவந்தார். பிரதமரின் நிவாரண நிதி, தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், நடனக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், கூலித் தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்காகவும் அவர் பல லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார். அதன்படி இது வரையும் 3 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான தொகையை அவர் நிவாரணமாக வழங்கியுள்ளார். இந்த நிலையில் பழங்குடி மக்களுக்காகப் பணியாற்றி சமீபத்தில் மரணமடைந்த மருத்துவர் ஜெயமோகனுக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘மருத்துவர் ஜெயமோகனின் மரணச் செய்தி கேட்டு மனம் நொறுங்கிப் போனேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீலகிரியில் உள்ள பழங்குடி கிராமத்திற்கு அயராது பணியாற்றிய அவரது மனிதநேயத்தை நான் பெரிதும் மதிக்கிறேன். அந்த கிராமத்திற்குத் தேவையான அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் ஆர்வமுடைய மருத்துவர்களைக் கொண்டு செய்து தர வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன். அந்த உதவிகளை மருத்துவர் ஜெயமோகனின் பெயரிலேயே வரும் காலங்களில் செய்து கொடுக்க வேண்டும் என்றும் நான் முடிவெடுத்திருக்கிறேன். அவரது ஆன்மாவுக்குத் தரும் மரியாதையாக இதனை நினைக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *