mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / மாஸ்டர் இசை வெளியீட்டு விழா!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா!

March 16, 2020 10:30 am

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ‘ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும்’ எனத் தெரிவித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரிக்க, அனிருத் இசையில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஆர்.ஏ.புரம் லீலா பேலஸிலுள்ள அரங்கத்தில் (மார்ச் 15) மாலை மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கோட் சூட் அணிந்தபடி விஜய் கலந்துகொண்டார். அனைத்து நட்சத்திரங்களும் பேசி முடித்த பிறகு இறுதியாக மேடைக்கு பேசவந்த விஜய், “இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுல என்னோட ரசிகர்கள் கலந்துக்க முடியலை என்கிற வருத்தம் அவங்களைவிட எனக்கு நிறைய இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் கடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அரங்கத்துக்கு வெளியே நடந்த சின்ன சின்ன விஷயங்கள்தாம். அதனால் இந்த முறை ரசிகர்கள் இல்லாமல் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து இருக்கிறது. எனக்கும் இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது” என்றவர், அதன் பிறகு திரைப்படத்தில் பணியாற்றிய விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து பேசினார். தொடர்ந்து, “என்னோட படத்துல எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே நதிபோல ஓடிக்கொண்டு இருங்கிற ஒரு பாட்டு இருக்கு. நம்மோட வாழ்க்கையும் நதிபோலத்தான். அந்த நதியில விளக்கை ஏத்தி வணங்குவாங்க. பூக்களைத் தூவி வரவேற்பாங்க. பிடிக்காதவங்க சில பேர் நதியிலே கல் எறிஞ்சு விளையாடுவாங்க. நதி போய்கிட்டுதான் இருக்கும். நதிபோலதான் நம்ம வாழ்க்கையும்… நம்மோட கடமையைச் செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும். மக்களுக்கு எது தேவையோ அதைத் தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது” என்றும் விஜய் பேசினார்

கோட் சூட்ல செம்மையா இருக்கீங்க என்று தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் கேட்க, “ஒவ்வொரு தடவையும் மோசமா டிரஸ் பண்ணிட்டு போறன்னு இந்த தடவை ஸ்டைலா டிரஸ் பண்ணிட்டு போலாம்னு காஸ்ட்யூம் டிசைனர் கோட் சூட் கொடுத்தாங்க. நண்பர் அஜித் மாதிரி டிரஸ் பண்ணிட்டு போலாம்னு இப்படி வந்தேன். நல்லா இருக்கா” என்றார். உங்களுக்கு சின்ன பிரச்சினைன்னு வரும்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தாங்க என்று தொகுப்பாளர் பாவனா கேட்க, “வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம் அது. வேற லெவல் அது” என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இப்போ இருக்குற விஜய், 20 வருஷத்துக்கு முன்னால போய் இருக்கிற இளைய தளபதி விஜய்கிட்ட என்ன சொல்வீங்க என்று மறுபடியும் கேள்வி வர, “அப்போ இருந்தது போல ரெய்டுலாம் இல்லாத அமைதியான வாழ்க்கையைக் கேட்பேன். இப்பவும் ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஜாலியாத்தான் இருக்கு” என்று கூறி முடித்தார்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *