mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / எந்தக் கவலையையும் மறக்கவைக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு: ஏ.ஆர்.ரஹ்மான்!

எந்தக் கவலையையும் மறக்கவைக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு: ஏ.ஆர்.ரஹ்மான்!

March 20, 2020 11:58 am

எந்தக் கவலையையும் மறக்கவைக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. அப்படிப்பட்ட இசையைக் கொண்டு, கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இந்தக் கடினமான காலத்தைக் கடந்து செல்ல வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் வலியுறுத்தியிருக்கிறார். ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. முழுவதும் மியூசிக்கல் டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கும் 99 சாங்ஸ் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே அதிக அளவில் இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸாகும் என்று ஏக்கத்திலிருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மார்ச் 20ஆம் தேதி இந்தப் படத்தின் பாடல்கள் ரிலீஸாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பயத்தினால் வீட்டிலேயே இருக்கும் மக்களின் துயரத்தையும் புரிந்துகொண்டவர், “இந்த கஷ்டமான காலத்தில் உங்களுக்கு 99 சாங்ஸ் படத்தின் முழு ஆல்பத்தையும் ரிலீஸ் செய்து நான் மகிழ்ச்சியடைகிறேன். படத்திலுள்ள 14 பாடல்களும் மார்ச் 20ஆம் தேதி ரிலீஸாகின்றன. கூட்டில் அடைபட்டிருக்கும் இசைப் பறவைகள், அந்தப் பாடல்களைப் பாடி வீடியோவை போஸ்ட் செய்யுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

அறிமுக இயக்குநரான விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஏஹான் பட், எடில்சி வர்கஸ் ஆகிய இருவரும் அறிமுக நாயகன் – நாயகியாக இணைந்து நடித்திருக்கின்றனர். கடந்த வருடம் 9ஆம் தேதி பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *