mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / சானிட்டைசர், சோப்புகளுக்கு ஜிஎஸ்டி கூடாது: ராகுல் காந்தி!

சானிட்டைசர், சோப்புகளுக்கு ஜிஎஸ்டி கூடாது: ராகுல் காந்தி!

April 21, 2020 11:32 am

கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து சாதனங்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல பொருட்களுக்கும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், சானிட்டைசர், சோப்பு போன்ற கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. “சானிட்டைசர், சோப்பு, மருத்துவமனை படுக்கைகள், ஆகியவற்றுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ரத்தப் பரிசோதனைக்கான ஸ்ட்ரிப்ஸ், மருத்துவ தரம் வாய்ந்த ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவற்றுக்கு 12 சதவிகிதமும், மாஸ்க், பரிசோதனைக் கருவிகள், நோய்த் தடுப்பு மருந்துகள் ஆகியவற்றுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது” என்ற ஏப்ரல் 17 ஆம் தேதியிட்ட அரசின் பட்டியலை வெளியிட்டுள்ள அவர், இதுபோன்ற சூழ்நிலையில், சானிட்டைசர்கள், சோப்பு, மாஸ்குகள் உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி வசூலிப்பது தவறு என்றும் கொரோனா சிகிச்சை தொடர்பான அனைத்து சாதனங்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். அதோடு ஜிஎஸ்டி இல்லா கொரோனா என்ற ஹேஷ்டேக்- ஐ ட்விட்டரில் உருவாக்கியுள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *