mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க உத்தரவு: முதல்வர்!

புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க உத்தரவு: முதல்வர்!

March 27, 2020 5:25 pm

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை 29 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 35ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று புதிதாக 6 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மதுரை அண்ணா நகரில் வசித்து வந்த 54 வயது நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். தற்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதுபோன்று ஈரோட்டில் சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டு நபருடன் தொடர்பிலிருந்த இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரியலூரில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் சமுதாய பரவலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கொரோனாவின் வீரியம் மாநிலத்தில் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 500 மருத்துவர்கள் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 500 மருத்துவர்கள் மட்டுமின்றி, 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரை நியமிக்கவும் பணி ஆணைகள் கிடைத்தவுடன் அவர்கள் மூன்று தினங்களுக்குள் உடனடியாக பணியில் சேரவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *