mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / சென்னைக்கு ரெட் அலர்ட் – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்!

சென்னைக்கு ரெட் அலர்ட் – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்!

March 31, 2020 11:16 am

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதோ, அதுபோன்று இந்த நோய்த் தொற்று குறித்த வதந்திகளும் பஞ்சமில்லாமல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 24 பேரும், சென்னையில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை, சேலம், வேலூர் உட்பட 11 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சுற்று வட்டாரத்தில் 7 கி.மீ தொலைவில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளிடம் மருத்துவப் பரிசோதனை செய்யச் சுகாதாரத் துறை திட்டமிட்டிருந்தது.

சென்னையைப் பொறுத்தவரை அரும்பாக்கம், புரசைவாக்கம், தேனாம்பேட்டை மண்டலம் சாந்தோம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், வளசரவாக்கம், ஆலந்தூா், கோட்டூா்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவியுள்ளதால் சென்னை மாநகராட்சிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் சென்னைவாசிகள் பீதியடைந்த நிலையில், ரெட் அலர்ட் விவகாரம் குறித்து மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் சோதனை நடக்கிறதே ஒழிய, சென்னையில் சில பகுதிகளில் ரெட் அலர்ட் எதுவும் மாநகராட்சி விடுக்கவில்லை. பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி பீதியடைய வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *