mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / உலகப் பொருளாதாரம் கீழ்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது: ஐ.எம்.எப்.

உலகப் பொருளாதாரம் கீழ்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது: ஐ.எம்.எப்.

March 28, 2020 10:11 am

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா எதையும் எதிர்த்துப் போராடும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இரவு, “மூடப்பட்ட வென் டிலேட்டர் நிறுவனங்கள் மீண்டும் தங்கள் உற்பத்தியைத் தொடங்குங்கள்… ம்… வேகமாக’ என்று அவசர ட்விட் செய்துள்ளார். ஏனெனில் அமெரிக்கா கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது. இதனால்தான் டிரம்ப் இப்படி வெண்டிலேட்டர் நிறுவனங்களை வேகப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில், “நாம் கடுமையான பொருளாதாரப் பின்னடைவுக்குள் நுழைந்துள்ளோம்” என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார். (மார்ச் 27) ஆன் லைன் மூலம் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, “கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது, இது வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய நிதித் தேவையை ஏற்படுத்தும். 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலையை விட இனி வரும் காலங்கள் மோசமாக இருக்கும். உலககே பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்தோம் என்பது தெளிவாகிறது” என்று அவர் ஒரு ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் அவர் “வளர்ந்து வரும் சந்தைகளின் ஒட்டுமொத்த நிதித் தேவைகளுக்கான நிதியின் மதிப்பீடு 2.5 டிரில்லியன் டாலர். 80 க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர உதவி கோரியுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

About CmsnewsAdmin@123

Check Also

தங்கம் பவுன் ரூ.39,360

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *